ஞாயிறு, 16 ஜூலை, 2023


                                         வயது

என்ன சொல்ல,பிறப்புமுதல் கூடவே வளருவது எண்ணம் வண்ணங்களாகமாறும் போது சாலைவிதிகூறும் விளக்காய் வாழ்வின் வண்ணம் மஞ்சள்,பச்சை.சிகப்பு எதில் பயணம்செய்கிறோம் (மஞ்சள் குமரபருவமவரை,பச்சை காணாக்காணும்பருவம்,சிகப்புசுமைகளின் காலம்}  மஞ்சள் வண்ணம்  நண்பர்கள்,உறவினர்கள், பகைவர்கள்,வேண்டியவர்கள்,வேண்டாதவர்கள் என வேறுபாடு அறியா உலகம்  அப்போதைய தேவைகள் கேட்டஉடனேகிடைத்ததால் தன்னால் எல்லாம் முடியும், நண்பர்கள் போதும் எதையும் செய்யலாம்:புலன்கள் இனிமையான செயல்களோடு ஒன்றிணையவிரும்பும் பருவம்  இதன்காலம் பதின்ம தொடக்கம்.

         அறிவுரைகள் கசக்கும்/ ஆடம்பரம் விரும்பும்

           . மிகுந்த மரியாதை எதிர்பார்க்கும்

வீட்டில் பொறுப்பில்லா தன்மை.

மாற்று பாலினத்தவர் மேல் ஈர்ப்பு

அளவுக்கு மீறிய தன்னம்பிககை

கருத்துக்கள், கொள்கைகள் ,போன்றவற்றால் கவரப்பட்டு சரியா, சரியல்லவா ?என ஆராயாமல் உணர்ச்சி உந்துதலுக்கு அடிமைப்பட கூடிய பருவம் மஞ்சள் வண்ண குமரப்பருவம், இந்த கால கட்டம் மாற்றி யோசிக்க கூடிய புதிய வழிமுறைகாணுவதிலும் தனித்த  சுதந்திரமான முடிவு. புதிய உறவுகள், கட்டிகள், மதிலும் முதன்மை   என விரும்பும் பருவம் ஆகும்.

தொழிலில் ஆர்வம் உடையவாகளாக இருப்பர்.

பசுமை வண்ணம்      பொறுப்புகள், உரிமைகள், தன் எண்ணங்கள், பிறர் மீது ஏற்படுத்தபட்ட தாக்கம் அதன் மூலம் ஏற்படும் இனிமை, கசப்பு போன்ற உணர்ச்சி தாக்கங்கள் வடுக்களாகவும், வசந்தமாகவும் மனம் இறுக பற்றிக் கொள்ளும்.

       முடிவுகள் தீர்க்கமானதாக இருக்கும். சமரசம் கொள்ள வழி இல்லை.முடிவுகள் முரண்கள்,மாறுபாடுகள்,விரிந்த எல்லை,அனுபவத்தால் உணரப்பட்டால் மட்டுமே சரி என ஏற்றுகொள்ளும்.காலத்தால் ஏறபடும் சூழல்களுக்கு கொஞ்சம்கொஞ்சமாக தன்னை தகவமைத்து  ஒன்றிவிடும்தனமை ஆகியவை இதன்தன்மை ஆகும்.

           தலைமுறை இடை வெளியின் பிரதி பலிப்புஇருக்கும்.

சிகப்பு :-   வயது 60வதை நெருங்கிய பருவம், இயலாமை,   குறைவுசமூக தொடர்பு நிலை,சிலசூழல்களாள் தவரவிட்ட வாய்ப்புகள் அதற்கு தொடர்பாக ஏற்பட்ட குடும்ப சூழல் நிலை யை தற்போதய  பொருளாதாரஇடர்பாடு, உடல் பலவீனம் என அனைத்தும் வந்து அனைத்து கொள்ளும் பருவம்,

அனாதையான நிலை ஆயிரம் உறவுகள் இருந்தும்.

தன்னலத்தை பற்றிய அதிக அக்கறையால் தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற குறைபாடு, இளமை காலமுறைகளின் நடைமுறைகளை தற்போதய வேலைகளோடு ஒப்பீடு செய்து குறை காணுவதால் மற்றவர் வெறுப்புகளுக்கு ஆளாகும் தன்மை.மனதின் ஓட்டத்தில் மாறுபாடு தந்தை வழி, தாய்வழி உறவுகள் எல்லாம் பயன்கருதி தன்னைபயன்படுத்தமட்டும் தன்உடன் இரு.ந்தத்தாகநாடும் மனநிலைதன்மை 

வாழ்வின் இறுதி கட்ட நிலையின் ஆரம்பம் இது தான் சிகப்பு,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக