கோபம்:;
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
சனி, 29 ஜூலை, 2023
சென்றவை? வந்தவை?
சென்றவை எவை? வந்தவை எவை? இந்த கேள்விக்கு காலத்தை சொல்வதா? நிகழ்ச்சிகளா? சூழல்களா? மகிழ்ச்சியா, துன்பமா? இதே தரவுகள் தான் வந்தவை என்பவற்றிற்கும் அளவீடாக அமையும்.
காலம்: இதுதான் எல்லோரையும் தன்னுய பிடியில் வைத்து கொண்டே இருப்பது -
" நாம் அந்த காலத்தில் இது போன்று இல்லை என்ற சொல்லை கேட்டிருப்போம் கடந்தவை
எல்லாம் இனியவை என்போம் உண்மை நிதர்சனம் என்பது அவையும் கசந்த வையாக, அடக்க பட்ட உணர்வுகள், சாதி, மதம், பொருளாதாரம், பாலியல் பாகுபாடுகள் இவை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பருவத்திலும் தாக்கங்கள் பல்வேறுபட்ட தாக்கங்களை தரக்கூடியவனதாக இருந்தாலும் , அதன் பலன்கள் | சுவையூட்ட கூடிய நிகழ்வாக, காலத்தின் மறையாத வடுக்களையும் கூட தந்துவிட்டு போயிருக்கலாம், அதனால் வந்தவைகள் வாழ்வியலில் மாறுபாடுகளை ஏற்படுத்தியிருக்ககூடிய அசாத்தியங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாததாக இருந்திருக்கலாம். உலகில் பலவித மனிதர்கள் நாடு மதம் தேசம், இனம், நிறம், செழுமை| வறுமை, வளமும் என பல்வேறு மனிதர்கள் நாம் காண கூடியதாக அமைந்திருக்கிறது.
இதிலும் முறன்பொருத்தப்பாடுகள்தான் அதிகம் நிறைந்துள்ளது.
இக்கரைக்கு அக்கரை பச்சை என தூரதரிசினிகள்தான் நம்மை ஆட்கொண்டு ஆளுமை செய்யும் அதை எப்படியும் பிடித்துவிட முயலும் உடல் பலமும் உணர்வு பலமும் ஒருங்கே ஒரு வண்டியில் பூட்டபட்ட இரட்டை மாடுகள் ஒருங்கே செல்லும் காலகட்டத்தில் வந்தவை என பார்க்கும்போது அங்கு உணர்வுகள், உணர்ச்சிகள் தான் முதன்மை கடப்பாளர்கள் .சென்றவை எனும்போது முதியோர் அனுபவ சொல்லின் வலிமை புரியாமல் தவிர்த்து சென்றது.
பறப்பதற்கு ஆசை கொண்டு இருப்பதை இழந்தது,
தத்துவத்துவம் இல்லா நெறியாட்கள் காலம் கடந்த நிலையில் திரும்பிபார்க்கும் போது நாம் தவறவிட்டவை, தவறாக தொட்டவை எல்லா தெரியவரும்போது நாம் தெளிந்த அறிவை அடைந்திருப்போமே தவிர அது குழந்தை தொட்டிலில் பாடும்பாட்டுபோல செவி மடுக்க வோ செயல்படுத்தவே முடியாத நீர் மேலெ ழுத்து போலவே போகும்.
மலரும் நினைவுகள் மட்டுமே மனதோடு இருக்கும்
வாழ்க்கை இணையர் என்பதுதான கவிதை
அந்த கவிதை நவரசங்களை கொண்டதா?அல்லது மெல்லிய இசையாய் மனதை வருடி அக சுகமளிக்கும் நல்விருந்தாக அமைவது என்பது அவர்களின் இயைந்து செயலாற்றும் தன்மையின் ஊடாக பறிமாறப்படும் ஒரு நுண்ணர்வு ஆகும்
அது துணையா? துன்பமா ?என்பதை பட்ட அனுபவங்களை கொண்டுதான் நாம் தீர்மானிக்கிறோம்.
இனிக்கும் நிகழ்வுடன் தொடங்கும் அனைத்தும் இனிமையாகவே முடியும் என்பதற்கு எந்த ஒரு அச்சாரமும் இல்லை. தொடக்கத்தில் மகிழ்ச்சி தராத இருந்தவைகளின் பின் விளைவு மிக அற்புதமான முடிவை தந்தவைகளையும் காண்கிறோம்.
திட்டமிடாத செயல்கள், கட்டுப்பாட்டில் இல்லாத செயலாக்க (மனம் போன போக்கு) செயல்களான ஏற்படும் இவற்றின் விளைவுகள் தான் அவற்றில் பெற்ற அனுபவ எச்சங்கள் தான் வந்தவை, சென்றவையாக மாறி நிற்க்கும்
பிள்ளைகள்
இவர்கள் தான் நம் நம்பிக்கை ஊன்று கோல்கள் ஆகும்.
ஆண்கள் :- காலம் காலமாக நம்மனதில் ஆழமாக பதியபட்ட ஒரு கருத்து நம் குடும்பத்திற்கு ஆண் குழந்தை தான் நம்மைக் காக்கும், பெண் பிள்ளைகள் தமக்கான வாரிசு இல்லை வேறு ஒரு குடும்பத்திற்கு நாற்றாகத்தான் சென்று விளைவை தரும் அதனால்நமக்குஎன்ன பயன் என்று நினைத்த காலம் ஒன்று காரணம் அன்று சார்துவாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை காலம் மாறியதுஅவர்களும் சரிசமமாக வாழ வேண்டும் அவர்களும் நாகரீகமடைந்த ஒரு சமூகத்தின் அங்கம் என்ற சிந்தனை 18ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி சமுதாய சமத்துவம் என்ற நிலைக்குவந்துள்ளோம்
இப்போது எந்த பிள்ளையும் ஒன்று தான் என்ற மனநிலை வந்துள்ளது குறிப்பாக ஆண் சாந்த உலகத்தில் பெண் சார்ந்த உறவுகள் மட்டும்தான் தன் தாய் தந்தை உறவை சார்ந்து நிற்கின்ற
ஞாயிறு, 16 ஜூலை, 2023
வயது
என்ன சொல்ல,பிறப்புமுதல் கூடவே வளருவது எண்ணம் வண்ணங்களாகமாறும் போது சாலைவிதிகூறும் விளக்காய் வாழ்வின் வண்ணம் மஞ்சள்,பச்சை.சிகப்பு எதில் பயணம்செய்கிறோம் (மஞ்சள் குமரபருவமவரை,பச்சை காணாக்காணும்பருவம்,சிகப்புசுமைகளின் காலம்} மஞ்சள் வண்ணம் நண்பர்கள்,உறவினர்கள், பகைவர்கள்,வேண்டியவர்கள்,வேண்டாதவர்கள் என வேறுபாடு அறியா உலகம் அப்போதைய தேவைகள் கேட்டஉடனேகிடைத்ததால் தன்னால் எல்லாம் முடியும், நண்பர்கள் போதும் எதையும் செய்யலாம்:புலன்கள் இனிமையான செயல்களோடு ஒன்றிணையவிரும்பும் பருவம் இதன்காலம் பதின்ம தொடக்கம்.
அறிவுரைகள் கசக்கும்/ ஆடம்பரம் விரும்பும்
. மிகுந்த மரியாதை எதிர்பார்க்கும்
வீட்டில் பொறுப்பில்லா தன்மை.
மாற்று பாலினத்தவர் மேல் ஈர்ப்பு
அளவுக்கு மீறிய தன்னம்பிககை
கருத்துக்கள், கொள்கைகள் ,போன்றவற்றால் கவரப்பட்டு சரியா, சரியல்லவா ?என ஆராயாமல் உணர்ச்சி உந்துதலுக்கு அடிமைப்பட கூடிய பருவம் மஞ்சள் வண்ண குமரப்பருவம், இந்த கால கட்டம் மாற்றி யோசிக்க கூடிய புதிய வழிமுறைகாணுவதிலும் தனித்த சுதந்திரமான முடிவு. புதிய உறவுகள், கட்டிகள், மதிலும் முதன்மை என விரும்பும் பருவம் ஆகும்.
தொழிலில் ஆர்வம் உடையவாகளாக இருப்பர்.
பசுமை வண்ணம் பொறுப்புகள், உரிமைகள், தன் எண்ணங்கள், பிறர் மீது ஏற்படுத்தபட்ட தாக்கம் அதன் மூலம் ஏற்படும் இனிமை, கசப்பு போன்ற உணர்ச்சி தாக்கங்கள் வடுக்களாகவும், வசந்தமாகவும் மனம் இறுக பற்றிக் கொள்ளும்.
முடிவுகள் தீர்க்கமானதாக இருக்கும். சமரசம் கொள்ள வழி இல்லை.முடிவுகள் முரண்கள்,மாறுபாடுகள்,விரிந்த எல்லை,அனுபவத்தால் உணரப்பட்டால் மட்டுமே சரி என ஏற்றுகொள்ளும்.காலத்தால் ஏறபடும் சூழல்களுக்கு கொஞ்சம்கொஞ்சமாக தன்னை தகவமைத்து ஒன்றிவிடும்தனமை ஆகியவை இதன்தன்மை ஆகும்.
தலைமுறை இடை வெளியின் பிரதி பலிப்புஇருக்கும்.
சிகப்பு :- வயது 60வதை நெருங்கிய பருவம், இயலாமை, குறைவுசமூக தொடர்பு நிலை,சிலசூழல்களாள் தவரவிட்ட வாய்ப்புகள் அதற்கு தொடர்பாக ஏற்பட்ட குடும்ப சூழல் நிலை யை தற்போதய பொருளாதாரஇடர்பாடு, உடல் பலவீனம் என அனைத்தும் வந்து அனைத்து கொள்ளும் பருவம்,
அனாதையான நிலை ஆயிரம் உறவுகள் இருந்தும்.
தன்னலத்தை பற்றிய அதிக அக்கறையால் தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற குறைபாடு, இளமை காலமுறைகளின் நடைமுறைகளை தற்போதய வேலைகளோடு ஒப்பீடு செய்து குறை காணுவதால் மற்றவர் வெறுப்புகளுக்கு ஆளாகும் தன்மை.மனதின் ஓட்டத்தில் மாறுபாடு தந்தை வழி, தாய்வழி உறவுகள் எல்லாம் பயன்கருதி தன்னைபயன்படுத்தமட்டும் தன்உடன் இரு.ந்தத்தாகநாடும் மனநிலைதன்மை
வாழ்வின் இறுதி கட்ட நிலையின் ஆரம்பம் இது தான் சிகப்பு,
சனி, 15 ஜூலை, 2023
சிந்திப்போமா?
இந்து மத சடங்குகளின் முன்னோர்கள்ளுக்கு திதி எனப்படும் முன்னோர்களுக்குகான சடங்கு, மாசிமகத்தில் கூட்டமாக ஆறு, கடற்கரையில், பார்ப்பனால் மந்திரம் சொல்லி அவர்களுக்கு அரிசி காய்கறிகள் கொடுக்கிறார்கள்.
ஒருவர் 2 கிலோ என்றாலும் பல லட்சம் பேர்கள் கொடுக்கும் அவை உண்மையில் முன்னோர்களுக்குகின்றனவா?
அப்படி என்றால் அது எப்படி சாத்தியம்?
1.தான் வாழும் காலத்தில் செய்த பலாபலன்களுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம்,
2. மறுபிறவி
1.ன்படி ஒருவர் சொர்க்கத்தில் இருப்பாரேயானால் அவர் எப்படி வெளியில் வர, அதுவும் கற்பனைக் கெட்டாத சுகங்கள் கிடைகும்நிலையில் அதை மறுத்து இங்கு வர இயலுமா அப்படி வரதான அனுமதி கிடைக்குமா?
2 ன் படி நரக வேதனை அடைந்தவா தண்டனை அடைந்தவர் வெளியில் வர முடியுமா? அப்படியே கொடுக்கும் உணவு வருட தேவையை நிறைவு செய்யுமா"
3 மறுபிறவி அடைந்தால் அதை அவர் பெறுவாரா? அப்படி என்றால் நாம் கொடுப்பது யாருக்கு? சிந்திப்போமா?
செவ்வாய், 11 ஜூலை, 2023
பெரும்பான்மையும் சிறுபான்யும் பெரியார் விளக்கம்




