திங்கள், 18 மே, 2020

இராவணன் வித்தியாதரன்?

பதிப்புரை

பேராசிரியர் சக்கரவர்த்தி (நயினார்) M.A., I.E.S., அவர்கள், உயர்கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அறிஞர்.

சிறந்த சிந்தனையாளர். ஆய்வுக் கருத்துகளை உரையாகவும், நூலாகவும் எழுதிய எழுத்தாளர்.

சமணச் சார்புள்ளவர். 1949இல் தந்தை பெரியார் சென்னையில் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்கு 151611949 இல்) இரண்டாம் நாள் மாநாட்டிற்குத் தலைமையேற்க செய்தார்கள்.

சென்னையில் கல்வி அறிஞர் சக்கரவர்த்தி நயினார் மறைந்தபோது (13.02.1960) சென்ற தந்தை பெரியார் சிறிது தூரம் இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்று மரியாதை செலுத்தினார்.

இராவணன் பற்றிய சீரிய கருத்துகளை அவரது ஆய்வு கண்ணோட்டத்தோடு எழுதி, 1947இல் சென்னையின் அக்கால பிரபல புத்தக வெளியீட்டகமான முத்தமிழ் நிலையம்' சார்பில் வெளியிட்டார்கள்.

இராமாயண முக்கிய பாத்திரமான ராவணனை போற்றும் அறிஞர்கள், பேராசிரியர் M.S.பூர்ணலிங்கம் பிள்ளை , அமிர்தலிங்க அய்யர், பரமசிவ அய்யர், புலவர் குழந்தை வரிசையில் இவரது சிந்தனையும் எண்ணப்பட வேண்டிய ஒன்று.

காரைக்குடி மாவட்டத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அரங்கசாமி அவர்கள் இந்தப் பழைய நூலை நமது பெரியார் ஆவணக் காப்பகத்திற்கு அளித்தமைக்கு நமது நன்றி!

படித்து, சிந்தித்துப் பயன் பெறுக!

25.5.2018

- கி.வீரமணி, பதிப்பாளர் சார்பில்


இராவணன் வித்தியாதரன்?

இராமனுடைய விரோதிகளை வால்மீகி இராக்கதர் எனல்

வித்தியாதரர் என்ற சொல் சமண இலக்கியத்தில் ஒரு மனித வகுப்பினரை குறித்ததாகும். அவர்கள் பண்டை இந்தியாவில் மிகவும் தலைசிறந்த வகுப்பினர். சமண இலக்கியத்துக்குப் புறம்பாகவோ அச்சொல், அது மனித இயல்புக்குப் புறம்பான ஒரு குழுவை - பேய், பிசாசுகள், ஆவிகள் போன்ற நிலையினர் குறித்ததாயிற்று. சமண இலக்கியத்தில் மட்டுமன்றிப் புத்த இலக்கியத்திலும் வித்தியாதரர் நிலை மிக உயர்ந்தது.

வித்தியாதரரைப்பற்றி வேண்டுமானால், நாம் நாம் ஆராய வரலாற்றுக் காலங்களுக்கு எவ்வளவோ அப்பால் செல்ல வேண்டும்.

இந்தியாவில் வரலாற்றுக் காலமென்பது கிரேக்கர் தொடர்பு, அதாவது அலெக்ஸாண்டருடைய படையெடுப்புக்குப் இந்திய காலமாகும். வரலாற்றாராய்ச்சியாளர் இந்நிகழ்ச்சியினையே கால விளக்கக் குறியாகக் கொண்டு இந்து, சமண, புத்த சார்பான இந்திய இலக்கியத்தில் கண்ட நிகழ்ச்சிகளை அதற்கு முன் இவ்வளவு தொலை பழைமையுடையது என்று கணக்கிடுகிறார்கள்.

இவ்வாராய்ச்சியில் நாம் சிறப்பாகக் கவனிப்பது சமண இலக்கியத்தையே. மகாவீர வர்த்தமானர் நிர்வாண (வீடு பெற்று நிலை அடைந்தது கி.மு. 527 என்பதை நாம் அட்டியின்றி ஏற்றுக் கொள்ளலாகும். அது கிட்டத்தட்டத் திட்டமான காலவரையறை என்பதில் ஐயமில்லை . சமணர் மரபுரைப்படி மகாவீரர் 24 தீர்த்தங்கரர்களின் வரிசையில் கடைசியானவர். அவரை அடுத்து முந்தியவர் பகவான் பார்சுவ நாதர் ஆவார். அவர் மகாவீரருக்கு ஓரிரண்டு நூற்றாண்டுகட்கு முந்தியவர். அவர் பெயர் உண்மை வரலாற்றில் இடம்பெற்ற பெயரே யன்றிக் கற்பனைப்பெயர் அல்லவே

இராவணன் வித்தியாதரனா? - A. சக்கரவர்த்தி நயினார்

அல்ல. அவருக்கும் முந்தியவர் அரிஷ்டநேமி. இவர் மாபாரதத்தின் புகழ்பெற்ற வீரர் கண்ணபிரானின் ஒன்றுவிட்ட உடன் பிறந்தார்.

இவரும் வரலாற்றுப்படி உண்மையிலிருந்தவரே என்று அய்யமறக் கூறலாம். எனவே, அவர் காலம் மாபாரத காலம் என்று பெறப்படும்.

வித்தியாதரரைப்பற்றி அறிய நாம் இதனிலும் முற்பட்ட காலத்தை ஆராய வேண்டும்.

இராமாயணத்தில் கூறப்பட்ட நிகழ்ச்சிகள் மாபாரதப் போருக்கு முந்தியவையே யாகும். சமண ராமாயணத்தைப் பார்த்தால், அதில் பண்டைக்கால இந்தியாவின் வித்தியாதர வகுப்பைப் பற்றிய தெளிவான விரிவுரை காணப்படுகிறது. வால்மீகியால் இராக்கதர்கள் என்றும், குரங்குகள் என்றும் இழித்துரைக்கப்பட்ட இராமனுடைய விரோதிகளைச் சமண இராமாயணக் கதையில் வித்தியாதரர் என்ற பெயரால் மிகவும் உயர்வுபடக் குறிக்கப்படுகிறார்கள்.

இராவணன் தியோர் வித்தியாதரர்கள்!

வித்தியாதரர் என்ற சொல்லின் நேர்பொருள், வித்தைகளிலும் கலைகளிலும் கரைகண்ட புலமையுடையவர் என்பதே. அவர்கள் வான ஊர்திகளில் செல்லும் ஆற்றல் உடையவராய் இருந்தது அவர்களுக்கேயுரிய தனிப்பெருஞ் சிறப்பாகும். வடமொழி இலக்கியத்தில் அவர்கள் பல விடங்களில் ‘கேசரர்' அதாவது 'வானில் உலவுபவர்' என்று குறிக்கப்படுகின்றனர். அவர்கள் நாகரிகத்தில் மிகவும் உயர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் அஹிம்சா தர்மத்தைப் பின்பற்றினார்கள்; ஏனெனில் அவர்கள் சமண சமயத்தினர்.

இலங்கை அரசன் இராவணன், அவன் உறவினர் நண்பர் முதலிய யாவரும், சமண சமயத்தை பின்பற்றிய வித்தியாதரர் என்பது இதனால் பெறப்படும். ஜினனை வென்றியஞ் செல்வனை வணங்கு முறையில் அவர்கள் கோயில்கள் எழுப்பினர்; கொல்லாமையைச் சமயக் கட்டுப்பாடாகவே பின்பற்றும் சமய சமயத்தின்படி அவர்கள் ஒழுகினர். இத்தகைய வித்தியாதரரை வால்மீகி இராக்கதர் என்று கூறினார். இது இனவெறுப்புக் காரணமாகவும் பகைமை காரணமாகவுமே என்பது தெளிவு. ஆனால், வால்மீகியின் கூற்றின்படிகூட இராவணன் உயர் பண்பாடு உடையவன் என்றும், இசையில் மிகவும் விருப்புடையவன் என்றும் விளங்குகிறது.


இராவணன் வித்தியாதரனா? - A. சக்கரவர்த்தி நயினார் | 7

இவ்வரை இராக்கதர், காட்டுமிராண்டிகள் என்ற கூற்றுக்களுடன் எவ்வாறு பொருந்தும்? பொருந்தாத அன்றோ?

இது போலவே கிஷ்கிந்தையை ஆண்ட மரபினரும், தப்புத் மாகக் குரங்கினம் என்று கூறப்பட்டிருக்கிறது. இக்கூற்றின் பிழைபாட்டையும் சமண இராமாயணம் எடுத்துக் காட்டுகிறது.

சமண இராமாயணத்தின்படி பார்த்தால் கிஷ்கிந்தையில் ஆட்சி பிரிந்தவர்களை வானரர் என்றழைத்தது ஒரு பெரிய பிழையின் பயனாகவே யாகும். அவர்கள் கொடியில் குரங்கு சின்னமாகக் கொண்டார்கள். அக்கொடியைத் தாங்கிச் சென்ற அவர்கள் படை, அக்காரணத்தாலேயே வானரசேனை என அடிக்கடிக் கூறப்பட்டது.

இதன் பொருள், குரங்கை கொடியாகவுடைய சேனை என்பது மட்டிலுமாகும். சமண மரபுரைப்படி இவர்களும் வித்தியாதரர், இவர்களும் மற்ற வித்தியாதரர் ஏற்ற பண்புடையவர்கள்.

இவர்களில் மிக முக்கியமானவன் ஹனுமான். இவ்வித்தியாதரன் அயோத்தி அரசனாகிய இராமனுடைய நண்பனானான்.

தமிழர் நாகரிகத்துக்கும், ஆரியர் நாகரிகத்துக்கும் நடந்த போரே இராமாயணப் போர்

சமண இராமாயணத்திலும், இராமருக்கும் இராவணனுக்கும் இடையே நடந்த போர் விரித்துரைக்கப்படுகிறது என்பது உண்மையே.

அப்போர் இருவரிடையே ஏற்பட்ட கலகங் காரணமாக உண்டானது.

அதற்குக் காரணமாயிருந்த செயல் இராவணனதே. ஆனால், இதனோடு கூடவே இருதரப்பாரிடையே பண்பாடுகளிடையேயும் ஒரு சச்சரவு இருந்ததென்று தெரிகிறது.

வால்மீகியின் கூற்றை உண்மையாகக் கொண்டு பார்த்தாலும் கூட இது விளங்கும். கீழ்நாட்டு நாகரிக ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, இராமாயணம் உண்மையில் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்த ஆரியருக்கும், அவர்களை எதிர்த்துத் தடுக்க முயன்ற நாட்டு மக்களாகிய இராக்கதர்களுக்கும் நடந்த போராட்டத்தில் தியாகும், சமண மரபுரைப்படி வித்தியாதரர் கொல்லாமை அகிம்சை) நெறியைப் பின்பற்றியவர்கள். எனவே, அவர்கள் உயிர்க்கொலை புரியும் வேத யஞ்ஜம் அல்லது யாகத்தை வெறுத்தார்கள்.


8 | இராவணன் வித்தியாதரன்? - A. சக்கரவர்த்தி நயின

இராவணன் கொல்லாமை நீர் ஒழுகிய யாகவிரோதி ரவிஷ்யணரின் பத்மபுராணத்தில் கூறப்படும் கதை ஒன்று இதற்குச் சான்று பகரும். இராவணன் பேரரசின் எல்லைகள் மருதவேந்தன் ஆதரவில் வேத யாகம் ஒன்றை நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இராவணன் அவை வரை இச்செய்தி எட்டிற்று இராவணன் அதனைத் தடுக்கும் பொருட்டுத் தன் அரசியல் பணியாளர்களை அனுப்ப முயன்றான். இறுதியில் அவன் கா அவ்விடம் சென்று அங்கே குடியிருந்த மக்களைக் கலைக்க அவ்வரச குடியினருக்கும் சமயத்தின் பேரால் உயிர்க்கொலை குருதி சிந்துவதன் தீமையை நன்கு விளக்கிக்காட்டி, அவர்களை கொல்லாமை நெறிக்குக் கொண்டு வந்தான்.

உயிர்க்கொலை

யாகத்தின்

வித்தியாதரர்கள் மீது வெறுப்புடையவர் என்பது, வால்மீகி எழுதிய இராமாயணத்தாலும் வெளிப்படுகின்றது. வால்மீகியின் கூற்றுப்படி இராக்கதர்கள் எப்போதும் யாகச் செயலுக்கான ஏற்பாடுகளைக் குலைக்கவே செய்தனர். கதைத் தொடக்கத்திலேயே விசுவாமித்திரர் தாம் செய்யும் யாகத்தில் இராக்கதர்கள் தலையிடுவதைத் தடுப்பதற்கென அயோத்தி இளவரசரான இராமன் இலக்குமணன் உதவியைக் கோரினார். வால்மீகி இராமாயணத்திலும் இராக்கதர்கள் பண்பை இச்செய்தி விளக்கமாகக் காட்டுகிறது. இராக்கதர்கள், பண்பாடோ, நுண்ணிய அறிவு திறமை அற்று, இயல்பாகவே காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள், அவர்கள் இவ்வுயிர்க்கொலை யாகத்தில் பலியிடப்படும் உயிர்களின் ஊனில் ஒரு பகுதி, பெறும் எண்ணமுடையவர்களாய் அதனுடன் ஒத்துழைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் நிலை இங்கே கூறப்பட்டபடி காட்டுமிராண்டிகள் இயல்புக்கு ஒத்ததாக இல்லை. நேர் மாறாக இந்நிகழ்ச்சி, அவர்கள் உண்மையில் கொல்லாமை நெறியைப் பின்பற்றிய உயர் பண்பாடுடைய வித்தியாதர வகுப்பினர் என்ற சமண நூற் கூற்றுக்கே முற்றிலும் பொருந்துவதாயிருக்கிறது.

இசையால் வென்ற கணவனை வரிக்கும் சுயம்வரம், தமிழரின் உயரிய பண்பாடு

சமணரின் தமிழ் நூல்களில் இதற்கொத்த செய்திகள்

இராவணன் வித்தியாதரன் - A.சக்கரவர்த்தி நயினார் | 9

என்பவனைப் பற்றியதாகும். அவன் பல இளவரசிகளை மணந்து கொண்டான். அவர்கள் முதலாவதாக வருவது, காந்தருவ தத்தை என்ற வித்தியாதர இளவரசியாகும். இக்காந்தருவ தண்ணியை அவள் தந்தை, ஒரு வணிக இளங்கோவுடன் ஜீவகன் வாழும் நகருக்கு அனுப்பிச் சுயம்வர முறையில் அவளை மணம் புரிவிக்கும்பி வினான். இச் சுயம்வரம், அதில் கணவனைத் தேர் வழங்கிய முறையும், வேறெங்கு மில்லாப் புதுமை 2 போட்டி மூலம் கணவனை தேர்ந்தெடுக்கும் முறை வடமொழியிலாயினும் சரி, தமிழிலாயினும் சரி, வேறெங்கும் கூறப்படவில்லை. இறுதியில் ஜீவகன் அவளை வீணை போட்டியில் வென்று அவளை வாழ்க்கைத் துணையாகக் கொண்டான். ஜீவகன் ஒருவன் நீங்கலாக மற்ற எல்லோரையும் இவ்வித்தியாதர நங்கை வென்றாளென்ற இச்செய்தி அவள் அடைந்திருந்த உச்சநிலைப் பண்பாட்டை நன்கு காட்டுவதாகும்.

தமிழிலுள்ள மற்றோரிலக்கிய நூலாகிய சூளாமணியில் வித்தியாதரரைப்பற்றிய இது போன்றதொரு குறிப்பு வருகிறது. இங்கும் வித்தியாதர இளவரசி ஒருத்தியை, அரச குடியினன் (க்ஷத்திரியன்) ஒருவன் மணப்பதாகக் காண்கிறோம்.

சமணர் வரலாற்றின் மிகத் தொடக்கக் காலத்தை அணுகி நோக்கினால், அங்கும் விருஷப் பகவான் வரலாற்றில் வித்தியாதரரைப் பற்றிய குறிப்பைக் காண்கிறோம். சமண வரலாற்றில், இந்து புராண வரலாற்றில் ஒரே படித்தாக விருஷப பகவான் காலம் கிருத யுகம் என்று குறிக்கப்படுகிறது. இது வரலாற்று காலத்தின் சார்பால் நெடுந்தொலைவான பண்டைப் பழங்காலத்திற்கு நம்மைக் கொண்டு செல்லுகிறது என்பது கண்கூடு.

மக்களுக்கு அரசியல் வகுத்த முதல்வர்

மக்கள் குடி வாழ்க்கையைச் சீரமைத்துப் பொருட் படைப்பு, பகுப்பு, பாதுகாப்பு முதலியவற்றுக்கான ஒழுங்கு முறைகளைக் கற்பித்து மனித வகுப்பு பொருளியல் அடிப்படையில் உருவாக்கின

10 | இராவணன் வித்தியாதரன்? - A. சக்கரவர்த்தி நயின

கற்பத்தில் (பெரும் பேரூழியில்) சமண சமயக் கொல்லாமை நெறியைச் சீர்திருத்திப் புது உரை தந்தவர் அவர்.

வித்தியாதரராகிய தமிழருக்கும் சத்திரிய அரசருக்கு மணம் சம்பந்தமான உறவு

நம்

விருஷப பகவானைப் பற்றிய சமண வரலாற்றில் நாம் கவனிக்க வேண்டிய இரண்டு சிறப்பு செய்திகள் உண்டு. ஒன்று. அவர் ஒரு வித்தியாதர இக்குவாகு மரபினர் என்பது. மற்றொன்று. அவர் இரு விக்கி அரசிளம் பெண்களை மணந்தனர் என்பது. இவற்றுட் பக்க ஆராய்ச்சியில் சரிநிகர் குறிப்பிடத்தக்க செய்தியாகும், ஏனெனில் அச்சமயம் இக்குவாகுக்களும், வித்தியாதரர்களும் சரி நிலையினராயிருந்தனர் என்பதை அது காட்டுகிறது. இக்குவாகு மரபினர் மிகவும் முதன்மை யுடையவராக வடமொழி இலக்கியத்தில் கருதப்படுகின்றனர். வேத நூல்களிலும், அவர்கள் ஆரியரிடையே தலைமை வாய்ந்த வகுப்பினர் என்று குறிக்கப் படுகின்றனர்.

பிற்கால வடமொழி நாடகங்களும், காவியங்களும் நாகரிகம் பண்பாடு வகைகளில் இக்குவாகுக்கள் மிக உயர்ந்த தலைமை நிலை உடையவர் என்று கூறிச் செல்கின்றன. இராமன் இக்குவாகு மரபினனே. கவுதம புத்தரும் இம்மரபினரென்றே கூறிக் கொண்டார்.

சமணரின் தீர்த்தங்கரர்கள் இருபத்து நால்வருள் பலரின் மரபின் வழி வந்தவர்களாகவே தெரிகிறது.

இத்தனைச் சிறப்பு மிக்க அரசகுடி (க்ஷத்திரிய) மரபினர் ஒருவர்.

வித்தியாதர அரச குடும்பத்துடன் மண உறவு கொண்டனர் என்பதிலிருந்து இரு செய்திகள் தெளிவுபடுகின்றன. ஒன்று, இவ்விரு மரபுகளும் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சரிநிகரான இருகுடிகளா இருந்திருக்க வேண்டும் அல்லது அவ்விரு வகையினரும் ஒரே இனத்தவராயிருக்க வேண்டும். உண்மை காரணம் இவற்றுள் எதுவாயினும் சரி; விருஷப் பகவான் வித்தியாதி அரசர் குடியிலிருந்து பெண் கொண்டனர் என்பதோடன்றி, இரண்டு பெண்களும் பட்டத்தரசியராகக் கொண்டனர் என்றும் அறிகிரே

மொஹஞ்சதாரோ புதையலில் திராவிடர் நாகரிகம் அதுமட்டுமன்று, விருஷப பகவானுடைய முற்பிறப்பில் அவர் வித்தியாதர பேரரசர் அதிபலராயிருந்தனர் என்றும் கூறப்படுகிறது இவ்வித்தியாதரப் பேரரசரும் கொல்லானமை நெறியை உறுதியாகன் கடைப்பிடித்த சமண சமயத்தினர்.

இராவணன் வித்தியாதரனா? - A. சக்கரவர்த்தி நயினார் | 11

கூறும் எல்லாச் சமய புராணங்களும் - வட மொழியிலுள்ள புராணங்களும், தமிழிலுள்ள புராணங்களும் ஒன்றைப்போலவே இச்செய்தியை வலியுறுத்துகின்றன. மிகவும் பழமை மிக்க அந்நாட்களிலேயே வித்தியாதரர்கள் இமய முதல் கன்னியாகுமரி இலங்கை வரையும், காந்தார முதல் மகதம் வரையும், மேலும் இந்தியா முழுவதும் ஆட்சி செலுத்தினர் என்று அறிகிறோம்.

மொஹஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும் அண்மையில் கண்ட பதை பொருள் ஆராய்ச்சிகளால் ஆரியருக்கு முந்திய ஒரு பழம் பெரு நாகரிகம் இந்நாட்டில் இருந்ததெனத் தெரியவருகிறது, நகரங்கள், அங்கே காணப்பட்ட அரண்மனைகள் ஆகியவற்றின் அழிவுகளும், மட்பாண்டங்கள், நாணயங்கள் ஆகியவையும் காணில், அவ்வளவு ஆதி பண்டைக் காலத்திலேயே மக்கள் எவ்வளவு உயர்ந்த வாழ்க்கைப் பண்பாடுடையவர்களாயிருந்தார்கள் என்பது தெரியவரும். இப்பொருள்களைக் கண்டெடுத்து ஆராய்ந்த கீழ்நாட்டு ஆராய்ச்சியாளர், அந்நாகரிகத்தைத் தோற்றுவித்த மக்கள் ஆரியர் வருமுன் இந்தியாவிலிருந்த திராவிட மக்களே என்று கூறுகின்றனர்.

திராவிடர்கள் வித்தியாதரர் யாதலின், இந்நகர்களில் வாழ்ந்த மக்களும் சமண நூல்களில் குறிக்கப்பட்ட வித்தியாதரராகவே யிருத்தல் வேண்டும்.

வேதங்களில் பழங்குடி மக்களுக்கு வசைமாரி

பழங்குடி மக்களைப் பற்றிய வேதங்களின் கூற்றுக்கள், பெரிதும் வசைமாரிகளாயிருப்பினும், அவற்றுள்ளும் அவர்களைப் பற்றிய உண்மைச் செய்திகள் பல விளக்கம் பெறுகின்றன. வேத இருடிகள் அவர்களைத் தாஸ்யர்கள் என்று குறித்தனர். இத்தாஸ்யர்கள் அல்லது தாஸர்கள், இந்திர வணக்கத்தை எதிர்த்தவர்கள். எனவேதான் அவர்கள் சமயச் சடங்கற்றவர் (அவிரதர்) என்றும்; மாறுபட்ட சடங்கு உடையவர் (அன்னிய வரதர்) என்றும்; யாகம் செய்யாதவர் (அயக்ஞர்) என்றும்; ரிக்வேதத்தை ஏற்காதவர்கள் (ஆண்-ரிக்) என்றும்; பிராமணப் புரோகிதரைக் கொள்ளாதவர் (ப்ராஹ்மணர்) என்றும்; இந்திரனை பொங்காதவர் (அனிந்திரர்) என்றும் பலவாறாகக் குறிப்பிடப்பட்டனர்.

வேத நூல்களில் கூறப்பட்ட தாஸ்யர்களின் இவ்விவரங்களிலிருந்து வேத முறைப்படி செய்யப்படும் யாகங்களை எதிர்த்து என்றும்; அவர்கள் வேறுபட்ட சமய சடங்குகளை உடையவர்கள்


12 | இராவணன் வித்தியாதரன்? - A. சக்கரவர்த்தி நயினார்

என்றும்; வேறுபட்ட மொழியைப் பேசினர் என்றும்; இந்திரன், அக்கினி முதலிய தெய்வங்களின் வணக்கத்தை எதிர்த்தனர் என்றும் தெரியவருகின்றன.

சிசினதேவ வணக்கம் என ஆரியர் இழித்துக் கூறியதன் கருத்து

வேத இலக்கியத்தில், இவர்களைப் பற்றிக் கூறப்பட்ட இன்னொரு செய்தி கீழ்நாட்டாராய்ச்சியாளர் பலருக்கு மயக்கத்தை உண்டுபண்ணி வந்திருக்கிறது. அது இத்தாஸ்யர்கள் சிசினதேவரை வணங்குபவர் என்பதே. சிசின தேவர் என்ற இத்தொடர், அறிஞர்களுக்குப் பெருமலைப்பை ஊட்டி வந்தது. அது குறி(லிங்க வணக்கம் என்று மொழி பெயர்க்கப்பட்டது. இத்தகைய கருத்து எழக் காரணம், தாஸ்யர்கள் மிகவும் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்ற பழைய கருத்தே. இந்தியாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் உள்ள நாகரிகமற்ற காட்டுமிராண்டி களிடையில் லிங்க வணக்கம் இருந்தது. ஆகவே, அவர்களுடனொப்ப, இவர்களிடமும் அவ்வணக்கம் இருந்தது என்று கொள்ளப்பட்டது. லிங்கம் பிறப்பின் அறிகுறி. அதில் இரு பகுதிகள் உண்டு. ஆண் சார்பான அடையாளம் (லிங்கம்), பெண் சார்பான அடையாளம் (ஆவுடை என்பவை. ஆனால், சிசின என்ற சொல் முதலது மட்டிலுமே குறிப்பது. எனவே, சிசினதேவர் என்பதை இலிங்க வணக்கம் எனக் குறிப்பது முற்றிலும் பொருந்தாது.

சமண மரபு இதனை அறிய மிகவும் உதவுகிறது. விருஷப பகவான் சரிதம் கொல்லாமை நெறி மீண்டும் தலையெடுத்து ஓங்கிய செய்தியை, நன்கு விளக்குகிறது. அவர் தம் மைந்தன் பரதனை அரசனாக்கித் தம் அரசுரிமை துறந்து யோகமும் தவமு மாற்றக் காடு சென்றார். அவர் தம் அணிகளையும் ஆடைகளையும் களைந்து, ஜாத ரூபத்துடன் அதாவது, பிறந்த மேனியுடன் நாட்கள் கழித்தார்.

இத்திகம்பர உருவுடனேயே அவர் கேவல ஞானமடைந்து, அதை பலவிடங்களிலும் (அவ்வுரு உடனே சென்று போ சென்று போதித்தார் விருஷ்பர் நிர்வாணம் அடைந்த பின் அவர் புதல்வன் பரதன் அவருக்குக் கயிலை மலையில் ஒரு கோயில் எழுப்பி, அண ஒரு சமைத்து வணங்கினான். இங்ஙனம் விருஷப பகவானுக்கு உருவமைத்துக் கோயில் கட்டி வழிபடும் வழக்கம் இந்தியா முழுவதும் பிறந்திருக்க வேண்டும்.

கணவன் வித்தியாதரனா? - A. சக்கரவர்த்தி நயினார் | 13

எனக்

கொள்கையினர். ஆதலின் அதனோடொப்பத் தம் நகரங்களிலும் இவ்வகைக் கோயில்கள் கட்டி வழிபட்ட இருக்க வேண்டும். அவர்கள் கோயில்களில் எழுப்பப்பட்ட உருவம் பேரியோகியாகிய விருஷப பகவான் திகம்பர உருவாகியிருந்தது. வெளிநாட்டுப் படை யெடுப்பாளரான ஆரியர் கண்களில், திகம்பர (நிர்வாண) உரு அணக்கமாகத் தோற்றியது. பகைமை காரணமாக, அதனைச் சிசின தேவர் என அவர்கள் இழிவுபடக் கூறினர். இப் பொருள்கோள் கொண்டால், ஆரியர் படையெடுப்புக்கு நெடுநாள் விருந்தே, இந்தியா முழுவதும் கொல்லாமை நெறியைப் இன்பற்றிய வித்தியாதரர்கள் நிறைந்து வாழ்ந்தவராதல் வேண்டும்.

தெற்கிலும் பிற்கால ருத்ர - சிவ வணக்க முறை ஏற்படும் வரையில், இந்த விருஷப வணக்கமே நிலைபெற்றிருந்தது. அது பின்பு ருத்ர சிவ வணக்கமாக மாறியது. தேவாரம் பாடிய நாயன்மார் புதிய இந்துமத இயக்கக் காலத்திலேயே ஆகவேண்டும்.

தேவாரப் பாடல்களின் கூற்றுக்களை ஆராய்ந்து பார் தென் இந்தியாவில் பண்டைய திராவிட அரசர்களான சோழர், பாண்டியர், சேரர், காஞ்சிபுரத்தில் பல்லவர், ஆகிய குடியினர் அனைவரும் சமண சமயத்தைப் பின்பற்றியவர்களே என்பதைக் காணலாம். அப்படியானால், அக்காலத்தில் தென் இந்தியாவில் நிலவியிருந்த சமண சமயத்தின் நிலை யாது?

தொல்காப்பியத்தில் கூறும் கந்தழிக்குப் பொருள் என்ன?

தமிழில் பெரும்பாலும் மிகப் பழமையான நூல் என்று கூறத்தகும் தொல்காப்பியத்தில், தென் இந்திய வாழ்க்கை நிலை நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. அதனை ஆராயின், முருகன், கண்ணன், இந்திரன் முதலிய பல்வேறு குல தெய்வங்களை மலைப் புறக் குடிகளும், பிற குடிகளும் வணங்கினதாக அறிகிறோம்.

ஆனால், தனிப்பெருந் தெய்வமாக வணங்கப்பட்ட ஒன்றின் பெயரும் தரப்பட்டிருக்கிறது. அது 'கந்தழி' என்று குறிக்கப்படுகிறது.

உரையாசிரியர்கள் அதற்குப்"எல்லாம் பற்றுக்களையும் கட்டுக்களையும் அறுத்தெறிந்து முதல் நிலை யடைந்தவன்” என்று விளக்கந் தருகின்றனர். இது சமணர் சித்தனைப் பற்றிக் கொண்ட கருத்திற்கு முற்றிலும் பொருத்தமானது. சித்தபரமேஷ்டியின் வணக்கம் மிகப் பண்டைக் காலத்திலிருந்தே தென் இந்தியாவில் இருந்து வந்து,


கணவன் வித்தியாதரனா? - A. சக்கரவர்த்தி நயினார் | 13

எனக்

கொள்கையினர். ஆதலின் அதனோடொப்பத் தம் நகரங்களிலும் இவ்வகைக் கோயில்கள் கட்டி வழிபட்ட இருக்க வேண்டும். அவர்கள் கோயில்களில் எழுப்பப்பட்ட உருவம் பேரியோகியாகிய விருஷப பகவான் திகம்பர உருவாகியிருந்தது. வெளிநாட்டுப் படை யெடுப்பாளரான ஆரியர் கண்களில், திகம்பர (நிர்வாண) உரு அணக்கமாகத் தோற்றியது. பகைமை காரணமாக, அதனைச் சிசின தேவர் என அவர்கள் இழிவுபடக் கூறினர். இப் பொருள்கோள் கொண்டால், ஆரியர் படையெடுப்புக்கு நெடுநாள் விருந்தே, இந்தியா முழுவதும் கொல்லாமை நெறியைப் இன்பற்றிய வித்தியாதரர்கள் நிறைந்து வாழ்ந்தவராதல் வேண்டும்.

தெற்கிலும் பிற்கால ருத்ர - சிவ வணக்க முறை ஏற்படும் வரையில், இந்த விருஷப வணக்கமே நிலைபெற்றிருந்தது. அது பின்பு ருத்ர சிவ வணக்கமாக மாறியது. தேவாரம் பாடிய நாயன்மார் புதிய இந்துமத இயக்கக் காலத்திலேயே ஆகவேண்டும்.

தேவாரப் பாடல்களின் கூற்றுக்களை ஆராய்ந்து பார் தென் இந்தியாவில் பண்டைய திராவிட அரசர்களான சோழர், பாண்டியர், சேரர், காஞ்சிபுரத்தில் பல்லவர், ஆகிய குடியினர் அனைவரும் சமண சமயத்தைப் பின்பற்றியவர்களே என்பதைக் காணலாம். அப்படியானால், அக்காலத்தில் தென் இந்தியாவில் நிலவியிருந்த சமண சமயத்தின் நிலை யாது?

தொல்காப்பியத்தில் கூறும் கந்தழிக்குப் பொருள் என்ன?

தமிழில் பெரும்பாலும் மிகப் பழமையான நூல் என்று கூறத்தகும் தொல்காப்பியத்தில், தென் இந்திய வாழ்க்கை நிலை நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. அதனை ஆராயின், முருகன், கண்ணன், இந்திரன் முதலிய பல்வேறு குல தெய்வங்களை மலைப் புறக் குடிகளும், பிற குடிகளும் வணங்கினதாக அறிகிறோம்.

ஆனால், தனிப்பெருந் தெய்வமாக வணங்கப்பட்ட ஒன்றின் பெயரும் தரப்பட்டிருக்கிறது. அது 'கந்தழி' என்று குறிக்கப்படுகிறது.

உரையாசிரியர்கள் அதற்குப்"எல்லாம் பற்றுக்களையும் கட்டுக்களையும் அறுத்தெறிந்து முதல் நிலை யடைந்தவன்” என்று விளக்கந் தருகின்றனர். இது சமணர் சித்தனைப் பற்றிக் கொண்ட கருத்திற்கு முற்றிலும் பொருத்தமானது. சித்தபரமேஷ்டியின் வணக்கம் மிகப் பண்டைக் காலத்திலிருந்தே தென் இந்தியாவில் இருந்து வந்து,

இராவணன் வித்தியாதரன் - A. சக்கரவர்த்தி

நயினார் 1 E

இந்தியாவிலிருந்து புகுத்தப்பட்ட செய்தியாகும். ஏனெனில் வட பார்ப்பன மரபின்படி, உழவு மிகவும் கடைப்பட்ட தொழிலாகும், அதை கடைப்பட்ட வகுப்பாகிய சூத்திரருக்கு உரியது. இரு பிறப்பாளராகிய துவிஜராகிய) முதன் மூவகுப்பினருக்கும் அது விலக்கப்பட்டது ளால்,தென்இந்தியாவில் முதன்மைபெற்றவகுப்புவேளாளராகவே இருந்ததனால் மக்கள் தொழில்கள் உழவுக்கு முதலிடம் உடது. மற்றெல்லாத் தொழிலாளரும் இத்தொழிலாளரை அண்டியே பிழைத்தவராதலால், அவையனைத்தும் உழவுக்கு கீழ்ப்பட்ட தொழில்களாகவே கருதப்பட்டன. இச்செய்தி தெய்வப் பகழ் சான்ற தமிழ்ப் பேரிலக்கிய நூலான திருக்குறளில் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இது வேளாண் வேதம் என்று குறிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது.

திராவிட ராகிய தமிழ், வேளாளரும் உயரிய நாகரிகம் உடைய வித்தியாதரர் மாவர்

எனவே தொல்காப்பியத்தால் வேளாளர் தென் இந்தியாவின் அன்றைய காலத்துத் தூய திராவிடர் என்பதும், தொல்காப்பியர் காலத்திலேயே வடநாட்டு வகுப்பு முறை தென் இந்தியாவில் புகத் தொடங்கிற்று என்பதும் தெளிவு.

இவ்வேளாளர் வகுப்பு முறையை மட்டுமன்றி வேதச் சடங்குகளையும் மறுத்தனர். ஏனெனில் அவர்கள் விருஷப பகவானின் கொல்லாமை நெறியை மேற்கொண்டவர்கள்.

இதிலிருந்து பண்டைய இந்தியாவின் வித்தியாதரர்கள். ஆரியர், வருமுன் இந்தியாவிலிருந்த மக்களே என்பதும், அவர்களே இன்று திராவிடர்கள்' என்றழைக்கப்படுகின்றனர் என்பதும் காணலாம். அவர்களே மொஹஞ்சதாரோ, ஹரப்பா புதை பொருளாரா தெளிவுபடுத்தப்பட்டது இந்தோ சுமேரியன் இன மக்களாவர். தென் இந்தியாவில் இவ்வினத்தின் பண்பாடு, தொன்று தொட்டுப் புதிய இந்து மத இயக்கம் ஒன்பதாம் நூற்றாண்டில் ஏற்படும் நல்வியிருந்தது. அந் நூற்றாண்டில்தான் காபாலிகர், சாக்தர் வந்து பொதுமக்கள் அறியாமையைப் பயன்படுத்தி, அப்பழம் பெருஞ் சமயம் அருக செய்தனர். சைவ சமயத்தில் முற்காலச் சைவ நெறி கொல்லாமை நெறியை சார்ந்தது என்ற உண்மை இக்கோட்பாட்டை வலியுறுத்தும். காபாலிக சைவம் எவ்வகையிலும்

இராவணன் வித்தியாதரன் - A. சக்கரவர்த்தி நயினார்

கொல்லாமை நெறியுடன் ஒத்து வரக் கூடியதன்று. ஏனெனில் அது ஊனுணவையும் குடியையும் ஆதரிப்பதுதான்.

கொல்லாமை நெறியொழுகும் சைவ சமயம் சமண சமயத்தின் மறு பெயரே


தெளிவுபடக்

சைவ

கொல்லாமை

பண்டைச்

நெறியை

எனது என்பது உண்மையானால், அது விருஷப பகவான் வணக்கத்திற்கு ஒரு மறுபெயரே என்பது தெளிவு. இவ்விடம் விருஷப பகவானுக்கே மகேசுவரன், மகாதேவன், யோகீசுவர் மஹாயோகி, சிவன், சிவ சொரூபம், சிவகதி நாயகன் முதலிய மற்ற பெயர்கள் இருந்தன என்பதை ஓர்தல் வேண்டும். புதிய இந்து இயக்கத்திற்கு முந்திய சமயத்தைச் சமண மதம் என்றழைத்தாலும் சரி; சைவம் என்றழைத்தாலும் சரி; அப்பெயரைப் பற்றிப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஏனெனில், சமணர் கூற்றுப்படி பார்த்தால், சமணரல்லாதார் கூற்றுப்படி பார்த்தால், அது கொல்லாமை நெறியை அடிப்படையாகக் கொண்டது என்பது யாவருக்கும் உடன்பாடான முடிவாகவே காணப்படுகிறது.

வித்தியாதரர் தமிழ்

முடிவாகக் கூறுமிடத்து, வித்தியாதரர் என்ற கேள்விக்கு விடை கண்டு. அவர்கள் ஆரியர் வரவுக்கு முந்திய காலத்து இந்தியாவின் பழங்குடிகள், வேதங்களில் கூறப்பட்ட தாஸ்யர்கள் அவர்கள். அவர்கள் உயரிய நாகரிகமும் பண்பாடும் உடையவர்கள்:

கொல்லாமை நெறியைப் பின்பற்றியவர்கள். அவர்கள் இன்று தென் இந்தியத் திராவிடர்களின் மூதாதையர்கள். அவர்கள் ஒரு காலத்தில் வட இந்தியாவில் பரந்திருந்தனர். ஆயினும், கி.பி. முதல் நூற்றாண்டு கட்குள், அவர்கள் தென் இந்தியாவில் மட்டுமே தலை சிறந்திருந்தனர். இங்கே அவர்கள் பின்னும் நெடுங்காலம் தம் அரசு தம் இலக்கியம், தம் சமயம் ஆகியவற்றை அழியாது பாதுக வந்தனர். அண்மையிலேயே வடநாட்டினின்று வந்த பிறநாடட் நாகரிகப் பண்பாட்டு ஆதிக்கத்தால் இவை நலிவடைய