செவ்வாய், 11 ஜூலை, 2023

பெரும்பான்மையும் சிறுபான்யும் பெரியார் விளக்கம்

பகுத்தறிவு



ஒருமுறை தந்தையாரிடம் ஒரு பொது கூட்டத்தில் ஒருவர் அய்யா! நீங்கள் ஒரு சிறுபான்மை சாதியினராக இருப்பவர்களாள் என்ன பாதிப்பு வந்து விட போகிறது அவர்களை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்று கேட்க தந்தை பெரியார் கூறிய பதில் என்ன தெரியுமா?
அய்யா! நீங்கள் சந்தை க்கு போகும் பக்கம் உண்டா?
உண்டு;
எதற்காக ஆடு, மாடு வாங்கவிற்க, சாமான்கள் வாங்க என சந்தைக்கு போவதுண்டு.
பெரியார்: சந்தைக்கு போகும் போது பணம் கொண்டு செல்வீர்கள் அல்லவா :
ஆமாம்,
பெரியார்*அதை எப்படி எடுத்து செல்வீர்கள்;
பத்திரமாக
சந்தையில் பல நூற்றுகணக்கான மக்கள் இருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் பத்திரமாக எடுத்து செல்வது ஏன்?
அய்யா! அங்கு திருடர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் என்றார்.
அவ்வளவு மக்கள் இருக்கும் போது சிறுபான்மையாக இருப்பவர்கள் தானே! அவர்களை கண்டு ஏன் பயப்பட வேண்டும்?
உங்கள் பொருள்கள் திருடு போய்விடும் என்பதால் தான்!
அதே போல் தான் சிறுபான்மையினர்  பெரும்பான்மை மக்களின் உரிமைகளை
தட்டி பறித்து செல்லாமல் இருக்க வேண்டியுள்ளது. என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக