திங்கள், 4 ஆகஸ்ட், 2025

கமிஷன்கள்.

 ஹேமா கமிட்டி அறிக்கையை கைவிட்ட கேரள அரசு ! 


2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரால் நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஆண் நடிகர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுசேர்ந்து ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற அமைப்பைத் தொடங்கினர். அவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு ஓய்வுபெற்ற கேரள நீதிபதி ஹேமா தலைமையில் விசரணைக் குழு ஒன்றை அமைத்தது.


பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவது எல்லாத்துறையிலும் தொடர்கிறது என்றாலும் சினிமாத்துறையில் அதை சந்திக்காத பெண்கள் குறைவு என்ற அளவுக்கு அது நடக்கிறது. நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை குழுவிடம் பல பெண்கள் துணிந்து புகார்களைக் கொடுத்தார்கள். அவர்களின் ஆடியோக்கள் வீடியோக்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் டிசம்பர் 2019 அன்று 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஹேமா.


ஆனால் விசாரணை அறிக்கைமீது எந்த நடவடிவக்கையையும் கேரள கம்யூனிஸ்ட் அரசு எடுக்கவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கையையும் பொதுவெளியில் வெளியிடவில்லை. இந்த நிலையில் 4 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ? என்ற கேள்வியுடன் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசை கண்டித்ததோடு RTI மூலம் அறிக்கை தரப்படவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. 


ஆகஸ்ட் 19, 2024 அன்று வெளியான அந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரள திரைப்படத்துறையில் பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் என பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்தவர்களின் பட்டியல் வெளியானது. இந்தியா முழுவதும் எந்த பெரிய சூப்பர் ஸ்டாரும் பெண்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது.


 "இந்த நடிகர்களை நாம் அளவுக்கு அதிகமாக நேசிக்கின்றோம். ஆனால் இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக மாறி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்," என்று தீதி என்ற நடிகை கூறினார். நடிகர்கள் மட்டுமல்ல கேரள கம்யூனிஸ்ட் அரசும் பாதிக்கப்பட்ட பெண்களை கைவிட்டுவிட்டது. 


AMMA  என்ற பெயரில் இயங்கும் கேரளா திரைத்துறை சம்மேளனம் கலைக்கப்பட்டது. புகார் குடுத்த பெண்கள் இனி திரைப்படத்துறையில் பயணிக்க முடியாது என்ற ஆணாதிக்க நடிகர்களின் மிரட்டல்களுக்கு உள்ளானார்கள். 


ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 35 வழக்குகள் பதியப்பட்டன. அந்த 35 வழக்குகளையும் முடித்து வைப்பதாகக் கேரளா அரசின் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது.


புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள்  யாரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆண்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க முன்வராததால் 35 வழக்குகளையும் கைவிடுகிறோம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. 


ஹேமா கமிட்டி அறிக்கை பெண்களுக்கு தங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைத் தந்தது தைரியத்தைத் தந்தது அதனைப் பார்த்து மேற்குவங்க அரசும் குழுவை நியமித்தது ஆனால் ஆண் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நீதி கேட்டு போராடி வெற்றிபெற்றுவிட முடியுமா ! அது பொதுவுடைமை பேசும் கம்யூனிஸ்டுகளின் அரசாகவே இருந்தாலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட முடியுமா ! இந்த கையறுநிலையைத்தான் பாதிக்கப்படும் பெண்களுக்கு பரிசளித்திருக்கிறார்கள். 


பாதிக்கப்பட்ட பெண்களின் மௌனத்தில் இருந்துதான் பல பொறுக்கிகள் போராளிகளாக வளம் வருகிறார்கள் என்பதும் உண்மை. தொடர்ந்து மிரட்டப்படுவதும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கி எதற்கு போராட வந்தோம் நாமும் சமாதானமாகப் போயிருக்கலாம் என்ற மனவுளைச்சகளுக்குத் தள்ளுகிறார்கள். 


ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு முடிவுகட்டி கேரளா அரசும் அதற்கு துணைபோகியிருக்கிறது.


அரசு அதிகாரம் ஆட்சி என்று வரும்போது அதைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எந்த எல்லைக்கும் போவதில் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றும் விதிவிலக்கில்லை. ஆனால் இங்கு இருக்கும் சிலர் அங்கே பார்த்தீர்களா என்கிறார்கள் இதைப்போன்ற விஷயங்களில் மௌனமாகி விடுகிறார்கள்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

சனி, 29 ஜூலை, 2023

சென்றவை? வந்தவை?


 சென்றவை எவை? வந்தவை 
எவை? இந்த கேள்விக்கு காலத்தை சொல்வதா? நிகழ்ச்சிகளா? சூழல்களா? மகிழ்ச்சியா, துன்பமா? இதே தரவுகள் தான் வந்தவை என்பவற்றிற்கும் அளவீடாக அமையும்.

காலம்: இதுதான் எல்லோரையும் தன்னுய பிடியில் வைத்து கொண்டே இருப்பது -

" நாம் அந்த காலத்தில் இது போன்று இல்லை என்ற சொல்லை கேட்டிருப்போம் கடந்தவை

எல்லாம் இனியவை என்போம் உண்மை நிதர்சனம் என்பது அவையும் கசந்த வையாக, அடக்க பட்ட உணர்வுகள், சாதி, மதம், பொருளாதாரம், பாலியல் பாகுபாடுகள் இவை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பருவத்திலும் தாக்கங்கள் பல்வேறுபட்ட தாக்கங்களை தரக்கூடியவனதாக இருந்தாலும் , அதன் பலன்கள் | சுவையூட்ட கூடிய நிகழ்வாக, காலத்தின் மறையாத வடுக்களையும் கூட தந்துவிட்டு போயிருக்கலாம், அதனால் வந்தவைகள் வாழ்வியலில் மாறுபாடுகளை ஏற்படுத்தியிருக்ககூடிய அசாத்தியங்கள் உண்டு என்பதை மறுக்க முடியாததாக இருந்திருக்கலாம். உலகில் பலவித மனிதர்கள் நாடு மதம் தேசம், இனம், நிறம், செழுமை| வறுமை, வளமும் என பல்வேறு மனிதர்கள் நாம் காண கூடியதாக அமைந்திருக்கிறது.

இதிலும் முறன்பொருத்தப்பாடுகள்தான் அதிகம் நிறைந்துள்ளது.

இக்கரைக்கு அக்கரை பச்சை என தூரதரிசினிகள்தான் நம்மை ஆட்கொண்டு ஆளுமை செய்யும் அதை எப்படியும் பிடித்துவிட முயலும் உடல் பலமும் உணர்வு பலமும் ஒருங்கே ஒரு வண்டியில் பூட்டபட்ட இரட்டை மாடுகள் ஒருங்கே செல்லும் காலகட்டத்தில் வந்தவை என பார்க்கும்போது அங்கு உணர்வுகள், உணர்ச்சிகள் தான் முதன்மை கடப்பாளர்கள் .சென்றவை எனும்போது முதியோர் அனுபவ சொல்லின் வலிமை புரியாமல் தவிர்த்து சென்றது.

பறப்பதற்கு ஆசை கொண்டு இருப்பதை இழந்தது,

தத்துவத்துவம் இல்லா நெறியாட்கள் காலம் கடந்த நிலையில் திரும்பிபார்க்கும் போது நாம் தவறவிட்டவை, தவறாக தொட்டவை எல்லா தெரியவரும்போது நாம் தெளிந்த அறிவை அடைந்திருப்போமே தவிர அது குழந்தை தொட்டிலில் பாடும்பாட்டுபோல செவி மடுக்க வோ செயல்படுத்தவே முடியாத நீர் மேலெ ழுத்து போலவே போகும்.

மலரும் நினைவுகள் மட்டுமே மனதோடு இருக்கும்

வாழ்க்கை இணையர் என்பதுதான கவிதை 

அந்த கவிதை நவரசங்களை கொண்டதா?அல்லது மெல்லிய இசையாய் மனதை வருடி அக சுகமளிக்கும் நல்விருந்தாக அமைவது என்பது அவர்களின் இயைந்து செயலாற்றும் தன்மையின் ஊடாக பறிமாறப்படும் ஒரு நுண்ணர்வு ஆகும்

அது துணையா? துன்பமா ?என்பதை பட்ட அனுபவங்களை கொண்டுதான் நாம் தீர்மானிக்கிறோம்.

இனிக்கும் நிகழ்வுடன் தொடங்கும் அனைத்தும் இனிமையாகவே முடியும் என்பதற்கு எந்த ஒரு அச்சாரமும் இல்லை. தொடக்கத்தில் மகிழ்ச்சி தராத இருந்தவைகளின் பின் விளைவு மிக அற்புதமான முடிவை தந்தவைகளையும் காண்கிறோம்.

திட்டமிடாத செயல்கள், கட்டுப்பாட்டில் இல்லாத செயலாக்க (மனம் போன போக்கு) செயல்களான ஏற்படும் இவற்றின் விளைவுகள் தான் அவற்றில் பெற்ற அனுபவ எச்சங்கள் தான் வந்தவை, சென்றவையாக மாறி நிற்க்கும்

பிள்ளைகள்

இவர்கள் தான் நம் நம்பிக்கை ஊன்று கோல்கள் ஆகும்.

ஆண்கள் :- காலம் காலமாக நம்மனதில் ஆழமாக பதியபட்ட ஒரு கருத்து நம் குடும்பத்திற்கு ஆண் குழந்தை தான் நம்மைக் காக்கும், பெண் பிள்ளைகள் தமக்கான வாரிசு இல்லை வேறு ஒரு குடும்பத்திற்கு நாற்றாகத்தான் சென்று விளைவை தரும் அதனால்நமக்குஎன்ன பயன் என்று நினைத்த காலம் ஒன்று காரணம் அன்று சார்துவாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை காலம் மாறியதுஅவர்களும் சரிசமமாக வாழ வேண்டும் அவர்களும் நாகரீகமடைந்த ஒரு சமூகத்தின் அங்கம் என்ற சிந்தனை 18ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி சமுதாய சமத்துவம் என்ற நிலைக்குவந்துள்ளோம் 

இப்போது எந்த பிள்ளையும் ஒன்று தான் என்ற மனநிலை வந்துள்ளது குறிப்பாக ஆண் சாந்த உலகத்தில் பெண் சார்ந்த உறவுகள் மட்டும்தான் தன் தாய் தந்தை உறவை சார்ந்து நிற்கின்ற







ஞாயிறு, 16 ஜூலை, 2023


                                         வயது

என்ன சொல்ல,பிறப்புமுதல் கூடவே வளருவது எண்ணம் வண்ணங்களாகமாறும் போது சாலைவிதிகூறும் விளக்காய் வாழ்வின் வண்ணம் மஞ்சள்,பச்சை.சிகப்பு எதில் பயணம்செய்கிறோம் (மஞ்சள் குமரபருவமவரை,பச்சை காணாக்காணும்பருவம்,சிகப்புசுமைகளின் காலம்}  மஞ்சள் வண்ணம்  நண்பர்கள்,உறவினர்கள், பகைவர்கள்,வேண்டியவர்கள்,வேண்டாதவர்கள் என வேறுபாடு அறியா உலகம்  அப்போதைய தேவைகள் கேட்டஉடனேகிடைத்ததால் தன்னால் எல்லாம் முடியும், நண்பர்கள் போதும் எதையும் செய்யலாம்:புலன்கள் இனிமையான செயல்களோடு ஒன்றிணையவிரும்பும் பருவம்  இதன்காலம் பதின்ம தொடக்கம்.

         அறிவுரைகள் கசக்கும்/ ஆடம்பரம் விரும்பும்

           . மிகுந்த மரியாதை எதிர்பார்க்கும்

வீட்டில் பொறுப்பில்லா தன்மை.

மாற்று பாலினத்தவர் மேல் ஈர்ப்பு

அளவுக்கு மீறிய தன்னம்பிககை

கருத்துக்கள், கொள்கைகள் ,போன்றவற்றால் கவரப்பட்டு சரியா, சரியல்லவா ?என ஆராயாமல் உணர்ச்சி உந்துதலுக்கு அடிமைப்பட கூடிய பருவம் மஞ்சள் வண்ண குமரப்பருவம், இந்த கால கட்டம் மாற்றி யோசிக்க கூடிய புதிய வழிமுறைகாணுவதிலும் தனித்த  சுதந்திரமான முடிவு. புதிய உறவுகள், கட்டிகள், மதிலும் முதன்மை   என விரும்பும் பருவம் ஆகும்.

தொழிலில் ஆர்வம் உடையவாகளாக இருப்பர்.

பசுமை வண்ணம்      பொறுப்புகள், உரிமைகள், தன் எண்ணங்கள், பிறர் மீது ஏற்படுத்தபட்ட தாக்கம் அதன் மூலம் ஏற்படும் இனிமை, கசப்பு போன்ற உணர்ச்சி தாக்கங்கள் வடுக்களாகவும், வசந்தமாகவும் மனம் இறுக பற்றிக் கொள்ளும்.

       முடிவுகள் தீர்க்கமானதாக இருக்கும். சமரசம் கொள்ள வழி இல்லை.முடிவுகள் முரண்கள்,மாறுபாடுகள்,விரிந்த எல்லை,அனுபவத்தால் உணரப்பட்டால் மட்டுமே சரி என ஏற்றுகொள்ளும்.காலத்தால் ஏறபடும் சூழல்களுக்கு கொஞ்சம்கொஞ்சமாக தன்னை தகவமைத்து  ஒன்றிவிடும்தனமை ஆகியவை இதன்தன்மை ஆகும்.

           தலைமுறை இடை வெளியின் பிரதி பலிப்புஇருக்கும்.

சிகப்பு :-   வயது 60வதை நெருங்கிய பருவம், இயலாமை,   குறைவுசமூக தொடர்பு நிலை,சிலசூழல்களாள் தவரவிட்ட வாய்ப்புகள் அதற்கு தொடர்பாக ஏற்பட்ட குடும்ப சூழல் நிலை யை தற்போதய  பொருளாதாரஇடர்பாடு, உடல் பலவீனம் என அனைத்தும் வந்து அனைத்து கொள்ளும் பருவம்,

அனாதையான நிலை ஆயிரம் உறவுகள் இருந்தும்.

தன்னலத்தை பற்றிய அதிக அக்கறையால் தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற குறைபாடு, இளமை காலமுறைகளின் நடைமுறைகளை தற்போதய வேலைகளோடு ஒப்பீடு செய்து குறை காணுவதால் மற்றவர் வெறுப்புகளுக்கு ஆளாகும் தன்மை.மனதின் ஓட்டத்தில் மாறுபாடு தந்தை வழி, தாய்வழி உறவுகள் எல்லாம் பயன்கருதி தன்னைபயன்படுத்தமட்டும் தன்உடன் இரு.ந்தத்தாகநாடும் மனநிலைதன்மை 

வாழ்வின் இறுதி கட்ட நிலையின் ஆரம்பம் இது தான் சிகப்பு,


சனி, 15 ஜூலை, 2023

சிந்திப்போமா?


 இந்து மத சடங்குகளின் முன்னோர்கள்ளுக்கு திதி எனப்படும் முன்னோர்களுக்குகான சடங்கு, மாசிமகத்தில் கூட்டமாக ஆறு, கடற்கரையில், பார்ப்பனால் மந்திரம் சொல்லி அவர்களுக்கு அரிசி காய்கறிகள் கொடுக்கிறார்கள்.

ஒருவர் 2 கிலோ என்றாலும் பல லட்சம் பேர்கள் கொடுக்கும் அவை உண்மையில் முன்னோர்களுக்குகின்றனவா?

அப்படி என்றால் அது எப்படி சாத்தியம்?

1.தான் வாழும் காலத்தில் செய்த பலாபலன்களுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம்,

2. மறுபிறவி

1.ன்படி ஒருவர் சொர்க்கத்தில் இருப்பாரேயானால் அவர் எப்படி வெளியில் வர, அதுவும் கற்பனைக் கெட்டாத சுகங்கள் கிடைகும்நிலையில் அதை மறுத்து இங்கு வர இயலுமா அப்படி வரதான அனுமதி கிடைக்குமா?

2 ன் படி நரக வேதனை அடைந்தவா தண்டனை அடைந்தவர் வெளியில் வர முடியுமா? அப்படியே கொடுக்கும் உணவு வருட தேவையை நிறைவு செய்யுமா"

3 மறுபிறவி அடைந்தால் அதை அவர் பெறுவாரா? அப்படி என்றால் நாம்  கொடுப்பது யாருக்கு? சிந்திப்போமா?

செவ்வாய், 11 ஜூலை, 2023

பெரும்பான்மையும் சிறுபான்யும் பெரியார் விளக்கம்

பகுத்தறிவு



ஒருமுறை தந்தையாரிடம் ஒரு பொது கூட்டத்தில் ஒருவர் அய்யா! நீங்கள் ஒரு சிறுபான்மை சாதியினராக இருப்பவர்களாள் என்ன பாதிப்பு வந்து விட போகிறது அவர்களை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்று கேட்க தந்தை பெரியார் கூறிய பதில் என்ன தெரியுமா?
அய்யா! நீங்கள் சந்தை க்கு போகும் பக்கம் உண்டா?
உண்டு;
எதற்காக ஆடு, மாடு வாங்கவிற்க, சாமான்கள் வாங்க என சந்தைக்கு போவதுண்டு.
பெரியார்: சந்தைக்கு போகும் போது பணம் கொண்டு செல்வீர்கள் அல்லவா :
ஆமாம்,
பெரியார்*அதை எப்படி எடுத்து செல்வீர்கள்;
பத்திரமாக
சந்தையில் பல நூற்றுகணக்கான மக்கள் இருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் பத்திரமாக எடுத்து செல்வது ஏன்?
அய்யா! அங்கு திருடர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் என்றார்.
அவ்வளவு மக்கள் இருக்கும் போது சிறுபான்மையாக இருப்பவர்கள் தானே! அவர்களை கண்டு ஏன் பயப்பட வேண்டும்?
உங்கள் பொருள்கள் திருடு போய்விடும் என்பதால் தான்!
அதே போல் தான் சிறுபான்மையினர்  பெரும்பான்மை மக்களின் உரிமைகளை
தட்டி பறித்து செல்லாமல் இருக்க வேண்டியுள்ளது. என்றார்